ஏ.எஸ்.எம்.ஜாவித் 2024.04.14
சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு புதுச் செட்டியார்தெரு சிவன் கோவிலின் ஏற்பாட்டில் மாபெரும் தேர்ப் பவணி ஒன்று புறக்கோட்டைப் பகுதியில் பல்வேறு வீதிகளினூடாக இன்று காலை இடம் பெற்றது.
இதன்போது பெருமளவான கொழும்பு வாழ் தமிழ் பக்தர்கள் தேர்ப்பவணியில் கலந்து கொண்டதுடன் பல நூற்றுக்கணக்கான தேங்காய்களை உடைத்து தமது நேர்த்திக் கடன்களையும் நிவர்த்தி செய்தமையை அவதானிக்க முடிந்தது.