இஸ்மதுல் றஹுமான்
9 கோடி 70 இலட்சம் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை தனது பயணப் பொதியில் மறைத்து வைத்து கொண்டுவந்த வெளிநாட்டவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
08.01.2025 அதிகாலை 2.40 மணிக்க QR 662 இலக்க கட்டார் எயார்வேஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்திறங்கிய 66 வயதான பொஸ்னியா நாட்டு பிரஜை எதுவுமே வெளிப்படுத்தாமல் வெளியேறும் முனையத்தினூடாக செல்லும் போது சுங்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தடுத்து நிறுத்தி அப் பயணியின் பொதிகளை பரிசோதித்துள்ளனர்.
அப் பொதியில் இருந்த கால்களை சுத்தம் செய்ய பயன்படுத்தும் 114 பிர்ஷ்களுக்குள் சூசகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கொக்கெய்ன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் நிறை 2 கிலோ கிராம் 759 கிராம் ஆகும்.
இவர் கொலம்பியாவில் இருந்து பயணத்தை ஆரம்பித்து கட்டார் ஊடாக இலங்கை வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பயணியையும் போதைப் பொருட்களையும் மேலதிக விசாரணைக்காக விமான நிலைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டன.