சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மேல் மாகாணத்தை இலக்கு வைத்து இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளன.
எனினும் கறுப்புச் சந்தையில் மதுபானத்தை விற்பனை செய்பவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக மதுவரித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக மது விற்பனைக்காக அதிகளவில் மதுபானங்களை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.