சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகள் ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் கீழ் 13.04.2024 விடுதலை செய்யப்படவுள்ளனர்.
சிறைச்சாலைகள் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான காமினி பீ திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 34இன் முதலாம் பிரிவில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.