சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய பொருட்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபான போத்தல்கள், சிகரெட்டுகள், Apple Smart கைப்பேசிகள், தொலைபேசி உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்களுடன் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொடை, மஸ்கெலியா மற்றும் கொழும்பு 13 பகுதிகளில் வசிக்கும் மூன்று பேரினால் இந்த பொருட்கள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்களும் அவற்றை சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டு வந்த மூன்று பேரும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.