(எஸ். சினீஸ் கான்)
தோப்பூர் செல்வநகர் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீரப்பதற்காக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் மற்றும் விவசாய சம்மேளன உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்று (11) செல்வநகர் பிரதேசத்தில் இடம்பெற்றது.
இதன்போது குறித்த பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், குறித்த பிரச்சினைகளைக்கு தீர்வுகளும் எட்டப்பட்டன.
இச்சந்திப்பின்போது திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் பொறியியலாளர் சுப்ரமணியம், விவசாய சம்மேளனத் தலைவர் தாஜ்மீன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் றிபாஸ், மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.