தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு தேவையான உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி, மரக்கறிகள், முட்டை, கோழி இறைச்சி மற்றும் பழங்களுக்குத் தட்டுப்பாடு இல்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் சடுதியாக அதிகரித்திருந்த மரக்கறிகளின் விலையும் அதற்கான தட்டுப்பாடும் தற்போது முற்றாக நீங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்தின் கீழ், கோழி இறைச்சி, முட்டை, மரக்கறிகள், பழங்கள் மற்றும் அரிசி என்பன தேவைக்கு அதிகமாகச் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.