ஏ.எஸ்.எம்.ஜாவித்
புனித ரமழானை முன்னிட்டு கொழும்பு 12 வாழைத்தோட்டம் அல் மஸ்ஜிதுல் முனீர் மஅல் மத்ரஸாவில் பகுதி நேரமாக அல்குர்ஆனை கற்றுவரும் மாணவர்கள் கடந்த ரழமான் முழுவதும் இரவு வேளைகளில் (ஹிஸ்பு) குர்ஆனை ஓதி முடித்து கடந்த நோன்பு 28 ஆம் இரவு பள்ளிவாசலின் பிரதம தர்மகர்த்தா ஜஹாங்கிர் அலி தலைமையில் தமாம் செய்து முடித்தனர்.
இவ்வாறு அல்குர்ஆனை தமாம் செய்தவர்களுக்கு பள்ளிவாசலின் நிருவாகத்தனரால் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் முன்னாள் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயரும் மத்ரஸாவின் போசகருமான எம்.ரி.இக்பால், மத்ரஸாவின் அதிபர் மௌலவி ரயிசுத்தீன், பிரதி அதிபர் மௌலவி ஸகாப்தீன் உள்ளிட்ட உலமாக்கள், பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள் நலன் விரும்பிகள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.