புனித ரமழான் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, நாட்டிலுள்ள சிறைகளில் இருக்கும் முஸ்லிம் சிறைக் கைதிகளைச் சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒழுங்குகளை, சிறைச்சாலைகள் ஆணையகம் மேற்கொண்டுள்ளது.
அதன்பிரகாரம், ஏப்ரல் 11 ஆம் திகதி வியாழக்கிழமை, புனித ரமழான் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, அன்றைய தினம் சிறைகளில் உள்ள முஸ்லிம் சிறைக் கைதிகளை மாத்திரமே சந்திக்க முடியும் என, சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் கைதிகளின் உறவினர்கள் உணவு, இனிப்பு வகைகள் மற்றும் சுகாதாரப் பொருட்களை மாத்திரமே, அன்றைய தினம் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
( ஐ. ஏ. காதிர் கான் )