இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு பிரதேச செயலகம் மேல் மாகாண சபையின் அனுசரனையில் 12 வது வருடமாக நடாத்திய இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை 8ம்திகதி பெரியமுல்லை கோல்டன் பெலஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் ரசிக்க மல்லவாரச்சி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சர்வமத தலைவர்கள் சிங்களம்,தமிழ், முஸ்லிம் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். திஹாரிய தன்வீர் அகடமியின் பிரதி அதிபர் அஷ் ஷேய்க் முன்சிப் தவூஸ் விஷேட உரை நிகழ்த்தினார்.