இலங்கை அரச நிருவாக சேவை தரம் ஒன்றில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் வகையில் அவர்களுக்கான நேர் முகப்பரீட்சை அன்மையில் பொது நிருவாக அமைச்சினால் நடாத்தப்பட்டிருந்தது.
குறித்த நேர்முகப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 41 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பதவி உயர்வு 2024.01.01 ஆம் திகதியில் இருந்து அமுழுக்கு வருவதுடன் இந்த 41 பேர்களில் இரண்டு முஸ்லிம்களும் ஏழு தமிழர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களில் தற்போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பணிப்பாளராக கடமையாற்றும் இஸட்.ஏ.எம்.பைஸலும் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் அனைவரும் அமைச்சுக்கள் உள்ளிட்ட பல உயர் அரச நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஏ.எஸ்.எம்.ஜாவித்