பண்டிகைக் காலங்களில் இறக்குமதி செய்யப்படும் சொக்லேட் உள்ளிட்ட இனிப்பு வகைகளை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் அதிகார சபை மக்களுக்கு அறிவித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து, காலாவதியான இனிப்புகளை பொருட்களை இறக்குமதி செய்து திகதிகளை மாற்றி விற்பனை செய்ய முயன்றவர்களை நுகர்வோர் அதிகார சபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேபோன்று கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு சம்பா அரிசி விற்பனை செய்பவர்கள் தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கடைகளை சுற்றிவளைத்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது