ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பல முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதாக, கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால மருதானை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மருதானை காவல்துறையினரிடம் ஹிரு செய்திச் சேவை வினவியபோது, காணாமல் போன கோப்புகளில் கட்சியின் நிர்வாக விவகாரங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, பல கோப்புகள் உள்ளதாக தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் 05.04.2024 ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மருதானை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.