இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதால் இலங்கைக்கு வருடம்தோறும் 60 ஆயிரம் கோடி ரூபா வருவாய் இழப்பு ஏற்படுவதாக நிதி தொடர்பான பாராளுமன்ற தெரிவு குழு சுட்டிக்காட்டியுள்ளது.
வெளிநாட்டு அமைச்சுடன் இணைந்து இது தொடர்பில் அவசர நடவடிக்கை எடுக்குமாறு அந்த குழு இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளது.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதால் வடக்கு கிழக்கு கடல் வளம் பாதிக்கப்படுபதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.