அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக கையடக்க தொலைபேசிகளின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியின் பலனை பாவனையாளர்களுக்கு வழங்கி கையடக்கத் தொலைபேசிகளின் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.