(அஷ்ரப் ஏ சமத்)
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா 03.04.2024 துறைமுக அமைச்சில் நடாத்திய ஊடக மாநாட்டில் ஊடகவியலார்களை பார்த்து … அவர்
ஊடகவியலாளர்களே…….நீங்கள் ஏன் நினைத்தெல்லாம் எழுதி பிரசுரிக்கின்றீர்கள் ? நீங்கள் பிழையான தகவல்களை கற்பனை செய்து பத்திரிகையில் எழுதி மக்களையும் பிழையாக வழிநடத்துகின்றீர்கள். அத்துடன் விமானம் கொள்வனவு சம்பந்தப்பட்டதும் அமேரிக்காவில் விபத்துக்குள்ளான கொள்கலன் கப்பலையும் பற்றி பிழையாக செய்திகளை எழுதுகின்றீர்கள்
உங்களது பத்திரிகை பார்ப்பவர்களுக்கும் உங்களுக்கும் நான் வகுப்பு வைக்கவேண்டும். சரியான தகவல்களை என்னிடமோ அல்லது எனது அதிகாரிகளிடம் கேட்டு எழுதுங்கள்
அமேரிக்காவின் பயங்கர கப்பல் தப்பித் தவறி கொழும்பு துறைமுகத்தில் வந்திருந்தால் கொழும்பு துறைமுகம் முற்றாக அழிவுற்றிருக்கும் என செய்தி எழுதப்பட்டுள்ளது. அந்தக் கப்பல் இலங்கையில் வர இருந்தது. அதில் இலங்கையில் 2 -3 கொள்களன்களை இறக்கிவட்டு அது சீனா பயணமாகியிருக்கும்……. அக் கப்பலில் என்ன பொருட்கள் இலங்கை கொண்டு வர இருந்தது. ? அமைச்சர் அது எனக்கு தெரியாது. அது இரசாயனப் பொருளாக இருக்கலாம், ஆயுதமாக இருக்கலாம். வெடி மருந்தாக இருக்கலாம். அல்லது பெயின்டாகவும் இருக்கலாம்
… கப்பல் கொழும்பு துறைமுகத்தில் வந்து இறங்கிய பின்னரே அதற்குள் என்ன உள்ளது யார் அதனை ஓடர் பன்னினார்கள் என்பது தெரிய வரும் அதற்கு முன்னர் கப்பலில் வரும் பொருட்கள் அவர்கள் இரகசியமாக வைத்துக் கொள்வார்கள். அதனை முன் கூட்டி தெரியப்படுத்த மாட்டர்கள் என அமைச்சர் பதில் அளித்தார்
ஸ்ரீலங்கா ஏயார் லைன் 4 விமானங்கள் பணம் செலுத்தியும் 2 விமானங்களே கொழும்பு வந்துள்ளது….இதற்கான நிதி எங்கே பெறப்பட்டது.
அமைச்சர் ….. இலலை அதற்கான நிதியை திரைசேரி 6 மாதகாலத்திற்கு வழங்கியது.. தற்பொழுது ஸ்ரீலங்கா எயார் விமான சேவையில் 15 விமானங்கள் சேவையில் ஈடுபடுகின்றது.
. …தற்பொழுது சுற்றுலாப் பிரயாணிகள் இலஙகையில நிரம்பி வழிகின்றார்கள் அவர்கள் ஸ்ரீலங்கா விமான சேவை ஊடகவே பிரயாணம் செய்ய விரும்புகின்றார்கள்.
கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு ஸ்ரீலங்கா விமான சேவை எவ்வாறு இருந்தது. அதனை கட்டிக் காத்து மீள புத்துயிர் அளித்து வருவதைப் பற்றிய கதைகளை எழுதுங்கள்…….
மேலும் விமானங்கள் தேவைப்படுகினற்து. ஒர் விமானம் 80000 இலட்சமா ? அது தெரியது…..அதற்கென அமைச்சின் செயலாளர்கள் கொண்ட டென்டர் கொமிட்டி உள்ளது.