கிண்ணியா தள வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவின் முயற்சியுடன் ஏனையவர்களது ஒத்துழைப்புடன் முனைச்சேனைப் பிரதேசத்தில் புதிய காணி பெறப்பட்டு, அக்காணியில் வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கு தேவையான Master Plan யை தயாரிப்பதற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் Dr. பாலித மகிபால அவர்களிடம் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் அவர்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய வைத்தியசாலையின் Master Plan யை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையூடாக CECB க்கு வழங்கி அதனை தயாரிப்பதற்கான நிதி ஒதுக்கீட்டினை வழங்குவதற்கும் சுகாதார அமைச்சின் செயலாளர் இன்று (04) அனுமதி வழங்கியுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் தெரிவித்துள்ளார்.