தாய்வான் நாட்டில் 03.04.2024 அதிகாலை ஏற்பட்ட7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் காரணமாக தெற்கு ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் தாய்வானின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஹுவாலியன் நகரில் கட்டிடங்கள் இடிந்து விழுவதுள்ள நிலையில் மக்கள் உள்ளே சிக்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய்வான் ஹுவாலியன் நகருக்கு தெற்கே 18 கிமீ (11 மைல்) தொலைவில் 34.8 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாய்வான் நிலநடுக்க கண்காணிப்பு நிறுவனம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை, தாய்வானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் திருத்தியுள்ளது.