சிறப்பு அங்காடிகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது பொலித்தீன் பைகளுக்கு பதிலாக மீளவும் பாவனை செய்யக் கூடிய பைகளை கொண்டு வரும் வாடிக்கையாளர்களின் பற்றுச்சீட்டில் இருந்து 5 ரூபாவை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அங்காடிகளின் தலைவர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் கண்காணிப்புக் குழுவுக்கு சிறப்பு அங்காடிகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது, 500 ரூபாவுக்கும் அதிகமான பற்றுச்சீட்டுக்களுக்கு இந்த தொகையை குறைக்க சிறப்பு அங்காடிகளின் தலைவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.