-பிரிட்டோ பிரனாந்து
இஸ்மதுல் றஹுமான்
முன்னால் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன முதிர்ச்சி இல்லாமையினால் அல்லது அரசியல் பிரபல்யத்தை எதிர்பார்த்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் என காணாமல் போனாரின் குடும்ப ஒன்றிய ஏற்பாட்டாளரும் சமூக செயற்பாட்டாளருமான பிரிட்டோ பிரனாந்து தெரிவித்தார்.
முன்னால் ஜனாதிபதி மைத்திரிபிலவின் கருத்து தொடர்பாக பிரிட்டோ பிரனாந்து தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, செனல் 4 வீடியோ வெளியிடப்பட்ட போது அது தொடர்பாக சமூகத்தின் அவதானம் செலுத்தப்பட்டது.
தற்போது மைத்திரியின் கருத்தினால் இந்த தாக்குதலுக்கு எதிராக கூடுதலானவர்கள் கதைக்கிறார்கள். ஒன்றில் அவர் முதிர்ச்சி இல்லாமையினால் அல்லது அரசியல் பிரபல்லியத்தை எதிர்பார்த்து அந்த கருத்தை தெரிவித்திருக்க முடியும்.
எப்படியாக இருந்தாலும் அரசு இது தொடர்பாக முறையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.
கத்தோலிக்க சபைக்கு கிடைத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மக்கள் தெரிந்துகொள்வது அவசியம். அதனால் அதனை பகிரங்கப்படுத்த வேண்டும்.
ஆனாலும் கத்தோலிக்க தேவஸ்தானம் அப்படிச் செய்யாதது ஏன்?
கார்தினல் அவர்கள் இது தொடர்பாக உற்சாகத்துடன் வேலை செய்தாலும் தேவஸ்தானங்கள் ஒத்தாசை வழங்குவதாக தெரியவில்லை. அதனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நீதி தொடர்பாக பலம்வாய்ந்த வெகுஜன இயக்கம் தேவை எனக் கூறினார்.