கல்ஹின்னை, படகொள்ளாதெனிய வாலிப முன்னணியின் தலைவரும் YMMA Galhinna இன் உப செயலாளருமான MAM. Afran தலைமையில் 13வது வருடமாக ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக (24.03.2024) ஞாயிற்றுக்கிழமை படகொள்ளாதெனிய ஹமீதீ ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் படகொள்ளாதெனிய வாலிப முன்னணியின் தலைவர் சகோதரர் அப்ரான் அஸ்ரப் அவர்கள் வாலிப முன்னணியின் உறுப்பினர் அல்ஹாபிழ் அல்ஆலிம் முஹம்மது (பத்தாஹி) அவர்களின் கிராஅத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.பயான் மற்றும் துஆ பிரார்த்தனை நிகழ்வை படகொள்ளாதெனிய லஜ்னதுல் உலமா அமைப்பின் சிறேஷ்ட உலமா அல்ஹாபிழ் அல்ஆலிம் ஸமீல் முஹம்மது (றஹ்மானி)அவர்கள் நடாத்தினார்கள். அதான் மற்றும் துஆவை வழங்கினார் அல்ஹாபிழ் அல்ஆலிம் பயாஸ் (பத்தாஹி) அவர்கள்.அதனை தொடர்ந்து காஸா சிறுவர் நிதியம் தொடர்பான விளக்கத்தை MRCA வினுடைய கண்டி மாவட்ட உத்தியோகத்தர் ஜனாப் சியாட் வழங்கினார்
இவ் இப்தார் நிகழ்வில் YMMA Galhinna இன் தலைவர் KM. Mafaz, செயலாளர் SHM. Riyaldeen, பொருளாலர் Alhaj. MHM. Shafi மற்றும் உறுப்பினர்கள், கல்ஹின்னை ஜம்இயதுல் உலமா சபையின் பிரதிநிதிகளான கண்ணியத்துக்குரிய உலமாக்கள் , முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் கண்டி மாவட்ட உத்தியோகத்தர்களான ஜனாப். Ziyad Mohammed மற்றும் ஜனாப் Mohammed Shalik, பிரதேச பாடசாலைகளின் கெளரவ அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், 12 மஹல்லாக்களின் மஸ்ஜித் நிர்வாகிகள் இன்னும் ஊரிலுள்ள அரசியல் பிரமுகர்கள், நலன்விரும்பிகள் , பிரதேச சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள், படகொள்ளாதெனிய ,பீறிஹெல, ஹல்கொல்ல மற்றும் கொடஹேன மஸ்ஜித் மஹல்லாக்களைச் சேர்ந்த சுமார் 500 இற்கு மேற்பட்ட ஆண்கள் கலந்து சிறப்பித்தனர்.
இப்தார் நிகழ்ச்சிக்கு மேலதிகமாக படகொள்ளாதெனிய வாலிப முன்னணியின் மூலமாக இலங்கை அரசின் காஸா சிறுவர் நிதியத்துக்கு எமது பங்களிப்பும் என்ற அடிப்படையில் நிதி சேகரிக்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்ஷாஅல்லாஹ் இந்த நிதி அடுத்த மாதம் 09.04.2024 அன்று முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் மூலமாக குறித்த நிதியத்துக்கு கையளிக்கப்படவுள்ளது.