29.03.2024 முதல் 31.03.2024 வரை கரையோரப் பாதையில் ரயில்களை இயக்குவதில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெள்ளவத்தைக்கும் கோட்டைக்கும் இடையே இயங்கும் ரயில்கள் ஒரு பாதைக்குமட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி புகையிரத நிலையங்களுக்கு இடையில் குழாய் ஒன்றின் பராமரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவுக்குப் பின்னர் ரயில் சேவை வழமைக்குத் திரும்பும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.