பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக ஊடக செயலி மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இலவசப் பரிசுகள் வழங்கப்படும் என கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உரிய தரவுகள் பெறப்படுவதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தம்மபொல குறிப்பிட்டார்.
இந்த வருடத்தின் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மாத்திரம் 200 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.