ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தௌபீக் கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயத்திற்கு புதன்கிழமை (27) விஜயம் செய்தார்.
இதன்போது பாடசாலையின் அதிபர் பாடசாலையில் செயற்படுத்தப்படவேண்டிய அபிவிருத்தி தொடர்பான விடயங்களை பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தினார்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்துகொண்டனர்.