தரம் குறைந்த மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புதன்கிழமை(27) காலை முறைப்பாடு செய்துள்ளார்.
விளக்கமறியலில் உள்ள தனது தந்தையின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதால், உடனடியாக விசாரணை நடத்தி நீதி வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.