எனது பதவியில் இருந்து நான் விலகப் போவதில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தொடர்ந்தும் தெரிவிக்யைில்,
எனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் மறுபரிசீலனை காரணமாக நான் பதவி விலகப் போவதில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அதில் தெளிவாக உள்ளேன்.
இந்த பதவியின் ஊடாக நாட்டுக்கு செய்ய வேண்டியதை செய்ய முடியாமல் போனால் மாத்திரமே நான் போவேன்.
நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில், நிறுவன ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் பொறுப்பு எனக்கு உள்ளது. நான் அதை செய்தேன். அதனால் நான் விலகுவதற்கு இதை ஒரு காரணமாக பார்க்கவில்லை.
இந்த தீர்மானம் நிதிச் சபையலால் மாத்திரம் எடுக்கப்பட்டது அல்ல. தொழிற்சங்கங்களுடன் பேசி மூன்று ஆண்டுகளுக்கு கூட்டு ஒப்பந்தம் மூலம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.