இலங்கையில் மக்டொனால்ட்ஸ் கிளை உணவகங்கள் மூடப்பட்டமைக்கு காரணம் உலகளாவிய ரீதியில் இயங்கும் மக்டொனால்ட்ஸ் நிறுவனம் அந்நிறுவனம் அல்ல என மக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அனைத்து மக்டொனால்ட்ஸ் உணவகங்களையும் மூடுமாறு அண்மையில் கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இலங்கையில் உள்ள மக்டொனால்ட்ஸ் உணவகங்களில் சுகாதார சீர்கேடு காணப்படுவதினை முன்னிட்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் மக்டொனால்ட்ஸ் உணவகத்தை முன்னின்று செய்யும் Abans நிறுவனமே இதற்கு காரணம் என மக்டொனால்ட்ஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து Abans நிறுவனத்திடமிருந்து மக்டொனால்ட்ஸ் உரிமத்தை நீக்குவதற்கு மக்டொனால்ட்ஸ் தலைமையகம் கோரியுள்ளதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.