ஏப்ரல் மாதம் முதலாம் திகதியில் இருந்து தனிநபர்கள், காணி, வாகனப்பதிவுகள், நிறுவன பதிவு, லீசிங் மற்றும் கடன் வசதிகள், வாகன பரிமாற்றம் உள்ளிட்ட பதிவுகளுக்கான தகவல்களை உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டுமென நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
வரி அறவிடும் நடவடிக்கையை விரிவுபடுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானியின் பிரகாரம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியில் இருந்து குறித்த தகவல்களை Online ஊடாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அந்த தகவல்களை அணுகக்கூடியவாறு அமைய வேண்டும் எனவும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.