மாத்தளை – வில்கமுவ காவல்துறையில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தரின் ரீ-56 துப்பாக்கி திருடிச் செல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த காவல்நிலையத்திற்கு முன்பாக 26.03.2024 கடமையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த துப்பாக்கி திருடிச் செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில், மாத்தளை சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.