ஆயிலியடி பக்கீரான்வெட்டை பிரதேச மக்களுடைய நீண்டகால கோரிக்கையாக இருந்த பொது விளையாட்டு மைதான காணியைப் பெற்றுக்கொடுப்பதற்கா திருகோணமலை மாவட்ட பாரளுன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக், அப்பிரதேசத்திற்கு திங்கட்கிழமை (25) கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
இதன்போது, அப் பிரதேச பள்ளிவாயல் நிருவாகம், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டதுடன் அச் சந்திப்பில் சில முக்கியமான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.