மஹியங்கனை – கண்டி பிரதான வீதியில் மெத-மஹனுவர ‘வங்கு தெக’ என்ற இடத்தில் சொகுசு பஸ்ஸொன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பஸ்ஸின் சாரதி, அதன் உரிமையாளர் மற்றும் மற்றுமொருவர் சிகிச்சைக்காக தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து விபத்துக்குள்ளான போது 1990 சுவசெரிய நோயாளர் காவு வண்டி அந்த இடத்தில் கீழ் வீதியில் சென்று கொண்டிருந்ததாகவும் ஆனால் விபத்தில் அதற்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர், அதே நோயாளர் காவு வண்டியில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பஸ்ஸை விற்பனை செய்வதற்காக கொழும்பு பகுதிக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.