இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்புடன், ஒரு பால் தேநீரின் விலையும் 5-10 ரூபாவால் குறைக்கப்படும் என, அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
இறக்குமதி செய்யப்படும் பாலின் விலையை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
3100 முதல் விற்பனை செய்யப்படும் 1 கிலோ பால்மாவின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்படும்.
1000 ரூபா தொடக்கம் 1200 ரூபா வரையிலான விலையில் விற்பனை செய்யப்படும் 400 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் மா பொதியின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
பால்மா விலைக்குறைப்பின் பலனை நுகர்வோருக்கு வழங்கும் பொருட்டு ஒரு கோப்பை பால் தேநீரின் விலையும் 5-10 குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.