மதுவரி திணைக்களத்தின் வரி வருமானம் கடந்த வருடம் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் 38.5 வீதம் அதிகரித்துள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.
மதுபானத்தின் விலை அதிகரிப்பு காரணமாக, கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மது உற்பத்தி 657,000 லீற்றர் அளவில் குறைந்துள்ளதாக மதுவரி ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் சட்டவிரோத மதுபானம் தொடர்பான சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நாடளாவிய ரீதியில் விசேட குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மதுவரி ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.