இஸ்மதுல் றஹுமான்
கொக்கைன் போதைப்பொருளை வில்லைகளாக விழுங்கிவந்த வெனிசியுலா நாட்டவர் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடக பேச்சாளர் சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
ஈ கே 650 இலக்க விமானத்தில் பிரேசில் நாட்டிலிருந்து டுபாய் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த பயணியை சுங்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தடுத்து விசாரித்துள்ளனர்.
விசாரணையில் சந்தேகம்கொண்ட சுங்க அதிகாரிகள் அவரை ஸ்கேன் பரிசோதனை செய்த போது வயிற்றில் வில்லைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
அவற்றை வெளியேற்றியபோது 12 வில்லைகளில் 132 கிராம் கொக்கேன் போதைப் பொருள் இருப்பது தெரியவந்துள்ளது.
41 வயதான வெனிசியுலா நாட்டவரை மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.