(அஷ்ரப் ஏ சமத்)
இலங்கையில் முதற் தடவையாக துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சினால் தேசிய மாலுமிகள் தினம் கடந்த 21.03.2024 கொழும்பு சங்கரில்லாஹ் ஹோட்டலில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் அமைச்சர் டக்லஸ்தேவாநாந்தா உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், பேராசிரியர் லலித் எதிரிசிங்க, கொரியா, சீனா கடற் மாலுமிகள் பல்கலைக்கழக பேராசிரியர்கள், கெப்டன் அஜித் பீரிஸ்,
பேராசிரியர் லலித் எதிரிசிஙக் ஆகியோர்களும் உரையாற்றினார்கள்
அத்துடன் பாடசாலைக் கல்வியில் தேசிய மாலுமிகள் கல்வியை இணைத்துக் கொள்வதற்கும் கல்வியமைச்சு இனக்கம் தெரிவித்து அத்துடன் உயர்கல்வியமைச்சு உள்ள மாலுமிகள் கல்வி நிலையத்தில் மாலுமிகள் சம்பந்தமான பாடப் புத்தகமாக இணைக்கப்பட்டுள்ளது. அந் நுால் வெளியீட்டு வைக்கப்பட்டது. அத்துடன் மாலுமிகள் பயிற்சியை முடித்த மாணவர்களுக்கு பயிலுனர்கள்காக தேசிய மாலுமிகளாக நியமனம் வழங்கப்பட்டது. அத்துடன் தபால் திணைக்களத்தினால் 25 ருபா தேசிய மாலுமிகள் நினைவு தின முத்திரியையும் வெளியீட்டு வைக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய அமை்சசர் நிமல் சிறிபால டி சில்வா ……
மாலுமிகள் பற்றி ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் கடல் சம்பந்தமான சட்டத்தினை பயின்ற கலாம் சென்ற அமைச்சர் லலித் அத்துலத்முதலி அவர்கள் அன்று சிங்கப்பூருக்குச் சென்று அங்கு மாலுமிகள் பயிற்சிகளை கடற்துறையையும் சிங்கப்பூரில் ஆரம்பிக்கும்டியும் அந்த நாட்டின் தலைமைத்துவத்துக்குச் ஆலோசனை வழங்கியிருந்தார்.
அதனை உடன் அப்போதைய அரசியல் தலைமைத்துவம் ஏற்று செயல்படுத்தியதால் கடற்மாலுமிகள் மற்றும் கடல்துறை பொறியியல்துறையில் பாரிய முன்னேற்றத்தினை சிங்கப்பூர் பெற்றுள்ளது . ஆனால் எமது நாடு சுதந்திரமடைந்து இன்றுதான் அந்த தேசிய தினத்தினைக் கூட முதன்முதலாக தேசிய ரீதியில் கொண்டாடுகின்றோம்.
இத்துறையில் அன்று எமது மாணவர்களை இளைஞர்களை மெரைன் இன்ஜியர்துறையில் நாம் வழிப்படுத்தியிருந்தால் எமது மாலுமிகள் உலகின் நால பாகங்களுக்கும் சென்று தொழில் பெற்று பெரும் அந்நியச் செலாவானியை இலங்கைக்கு ஈட்டியிருப்பார்கள். அத்துடன் இலங்கையிலும் மெரைன் இன்ஜியரிங் துறை வலுப்பெற்றிருக்கும்
இனறிலிருந்து இத்துறையையை இதற்கான பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம் எதிர்காலத்தில் 2030 ஆம் ஆண்டாகும் போது எமது நாட்டில் மாலுமிகள் 50 ஆயிரம் வரையை உருவாக்க உத்தேசித்துள்ளோம் எனவுமம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அங்கு உரையாற்றினார் அத்துடன் இக் கல்வியை பயின்று அனுமதி பெற்று வெளிநாடுகளில் தொழில் செய்வோர் மிக 001.2 அளவிலேயே இலங்கை உள்ளது.
உலகில் உள்ள சகல நாடுகளினதும் பொருளாதார துறை கடல் மாலுமிகள் துறையிலேயே மேலோங்கி நிற்கின்றது. ஆகவே தான் இலங்கை மாணவர்கள் வெறும் கலைப்பட்டதாரிகள் பயிற்சியை கைவிட்டு மாலுமிகள் மெரைன் கடல்சார் கப்பல்துறைகளை பயில வேண்டும். இத்துறையில் உலகில் பல முறையில் வெற்றிடங்கள் உள்ளுரிலும் வெளிநாடுகளிலும் உள்ளன. தங்களது எதிர்கால கல்வியை தொடர்மாணவர்கள் கடல் மெரைன் இன்ஜியனிரிங் பயிற்சிகளை தெரிபு செய்யுங்கள் என கப்பல்துறை சிவில் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அங்கு தெரிவித்தார்