உலகலாவிய ரீதியில் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் பத்து நாடுகளில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளதாக,
காலநிலை பாராளுமன்றத்தின் தலைவர் எரான் விக்கிரமரத்ன மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆகியோர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைப்பதற்கு இலங்கை காலநிலை பாராளுமன்றம் உள்ளக அமைப்புகளுடனும்,
ஏனைய நாடுகளுடனும் இணைந்து செயற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
2050 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் காலநிலை மாற்றம் ஒரு சதவீத இழப்பை ஏற்படுத்தும் மேலும்,
காலநிலை மாற்றத்தினால் இலங்கையின் விவசாயத் துறை பில்லியன் கணக்கான டொலர்களை இழக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்தார்.