நாளுக்கு நாள் அதிரிக்கும் வெயிலின் தாக்கத்தால் சந்தையில் இளநீர் விலை உயர்ந்துள்ளது.
இளநீர் உற்பத்தி குறைந்து தேவை அதிகரித்து வருகின்றமை காரணமாக இளநீர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, 100 முதல் 150 ரூபா வரையில் இருந்த இளநீர் தற்போது 180 முதல் 250 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்தனர்.