பல கார்கில்ஸ் விற்பனை நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை ஆரம்பிக்கும் புதிய முயற்சி நேற்று வியாழக்கிழமை (மார்ச் 21) கொழும்பில் தொடங்கப்பட்டது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் கருத்துப்படி,
இலங்கையின் மின்சார வாகன இயக்கத்திற்கு மாறுவதற்கு ஆதரவாக இந்த ” Charge while you shop’ என்ற முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஏஜென்சியுடன் (USAID) இணைந்து கார்கில்ஸ் இந்த திட்டத்தை செயல்படுத்துவதாக அமைச்சர் மேலும் கூறினார்.
அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் ஆகியோர் இணைந்து பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள கார்கில்ஸ் விற்பனை நிலையத்தில் இந்த முயற்சி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.