தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு, ரமழான் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை விசேட பொதுப் போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இதனை, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் இலங்கை போக்குவரத்துச் சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, புகையிரத திணைக்களம் மற்றும் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.