விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை எதிர்வரும் 25.03.2024 விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனு தொடர்பான ஆவணங்கள் தமக்கு கிடைக்கவில்லை என சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் லக்மினி கிரிஹாகம நீதிமன்றில் அறிவித்தார்.
இதன்படி, உரிய ஆவணங்களை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்குமாறு மனுதாரர்களுக்கு அறிவித்த நீதிபதி, மனுவை எதிர்வரும் 25.03.2024 பரிசீலனைக்கு அழைக்குமாறும் உத்தரவிட்டார்.