தென்மராட்சி, மிருசுவிலில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் ஏ9 வீதியின் ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.இன்று (22) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்தது.
எரிபொருளை ஏற்றியபடி யாழ்ப்பாணத்தை நோக்கிச் சென்ற பாரவூர்தி மிருசுவில் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மிருசுவில் ரயில் நிலையத்துக்கும், வைத்தியசாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் வீதிக்கு குறுக்காக எரிபொருள் பாரவூர்தி கவிழ்ந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.