வற் எனப்படும் பெறுமதி சேர் வரி மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலங்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சான்றுரைப்படுத்தியுள்ளார்.
21.03.2024 நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பத்தின் போது, சபாநாயகரின் அறிவிப்பின் கீழ், பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, குறித்த இரண்டு சட்டங்களும் 20.03.2024 முதல் அமுலாகின்றன.