இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு மேல் நீதிமன்ற ஆரச்சி பதவியில் உள்ளவர் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் நீர்கொழும்பு பிராந்திய குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டாவ, குலசெவன மாவத்தையைச் சேர்ந்த சமித் ராஜிக வானகுரு என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பிராந்திய குற்றப் புலனாய்வு பிரிவினரால் போதைப் பொருள் பாவனையாளர் ஒருவரை கைது செய்து உனக்கு எங்கிருந்து போதைப்பொருள் கிடைக்கின்றன என விசாரணை நடாத்திய போது குறித்த நபரிடமிருந்து பெற்றுக்கொள்வதாக கூறியுள்ளார். இந்த தகவலுக்கு அமைய குற்றப் புலனாய்வு பிரிவினர் சந்தேக நபரை 19ம் திகதி செவ்விய்கிழமை இரவு
நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக வைத்து சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டபோது இவரிடமிருந்து 8200 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கைபற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தி தடுப்புக் காவல் உத்தரவை பெற்று தடுத்து வைத்து விசாரணை நடாத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.