நாணயதாள்களை பரிசுப்பொருட்களாக, அலங்கரித்தல், மற்றும் மலர்களைப்போல உருவாக்கி பரிசளிப்பது போன்ற சம்பவங்கள் இப்பொழுது பேஷனாகியுள்ளது.
இந்நிலையில் நாட்டில் நாணயத்தாள்களை உருவச்சிதைத்தல் அல்லது சேதப்படுத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆபரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்களை தயாரிப்பதற்கு நாணயத்தாள்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
நாணயத்ததாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டவர்களுக்கு 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் அபராதம் அல்லது அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.