தினகரன் நாளிதழின் 92 ஆவது பிறந்த நாள் விழா 18 ஆம் திகதி லேக்ஹவுஸ் நிறுவனத்தில் தினகரன் ஆசிரியர் தே. செந்தில் வேலவர் தலைமையில் நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாகவும் லேக் ஹவுஸ் தலைவர் ஹரேந்திர காரியவசம் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் விசேட அதிதிகளாகவும் கலந்துசிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் தினகரன் பத்திரிகையின் வளர்ச்சிக்கு நீண்ட நாட்கள் சிறப்பாக பணியாற்றிய லேக் ஹவுஸ் நிறுவனத்தில் உற்பத்திப் பிரிவில் ( production Department) 34 வருடங்கள் சேவையாற்றிய எம். எம். இஸ்மதுல் றஹுமான் நிறுவன பொது முகாமையாளர் சுமித் கொதலாவல அவர்களினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பிராந்திய ஊடகவியலாளரான இஸ்மதுல் றஹுமான் தற்போது எமது “களம்பு டைம்ஸ்” பணிக்குழாத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு எமது வாழ்த்துக்கள்.