பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவில் பணியாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவை தெரிவுக்குழு பரிந்துரைத்ததாக பிரதி சபாநாயகர் 20.03.2024 காலை பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
எனினும் அப்போது எழுந்து உரையாற்றிய வசந்த யாப்பா பண்டார, தான் அந்தப் பதவியை இராஜினாமா செய்வதாக பிரதி சபாநாயகருக்கு அறிவித்தார்.
விரைவில் பதவி விலகலை எழுத்துப்பூர்வமாக வழங்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவில் அங்கம் வகிக்கும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது இராஜினாமா செய்துள்ளனர்.
இதேவேளை, கோப் குழுவிலிருந்து நேற்று வரை 7 எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் பாராளுமன்றத்திற்கு தெரிவான காமினி வலேபொட, பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் , ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரத்ன, ஹேஷா விதானகே மற்றும் எஸ். எம்.மரிக்கார், பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவில் இருந்து விலகிய உறுப்பினர்களில் அடங்குவர்.
கோப் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமைக்கப்பட்டமையை அடுத்து இவ்வாறு அதன் உறுப்பினர்கள் பதவி விலகியிமை குறிப்பிடத்தக்கது.