உள்ளூர் சந்தையில் முட்டை விலையை நிலையாகப் பேணுவதற்காக ஏப்ரல் 30ஆம் திகதி வரையில் தேவையான முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, தற்போது 18 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், பண்டிகைக் காலங்களின் தேவைகளுக்கு மேலும் 42 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட வேண்டுமென கணக்கிடப்பட்டுள்ளது.
குறித்த முட்டைகளை இறக்குமதி செய்வதற்காக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்திய நிறுவனத்திடமிருந்து விலைமனு கோரப்பட்டுள்ளது.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய குறித்த பெறுகைகளை வழங்குவதற்காக நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.