கிராம உத்தியோஸ்தர்கள் தொடர்பான சட்டத்தை தயாரிப்பதற்கான பத்திரம் மற்றும் கிராம உத்தியோஸ்தர்களின் பயண செலவுகள் மற்றும் அலுவலக கொடுப்பனவுகள் தொடர்பான யோசனை என்பன அமைச்சரவையில் கையளிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்த பின்னர் மேலதிக நடவடிக்கைகளும் பரிந்துரைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் அசோக பியந்த தெரிவித்தார்.
தற்போது வெற்றிடமாக உள்ள 2002 கிராமிய சேவைக் களங்களுக்கான கிராம உத்தியோஸ்தர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் மேற்க்கொள்ள அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.