இந்தியாவில் கோபி மஞ்சுரியனுக்குத் தடை, அகில உலக ஆய்வாளர்கள் மிகவும் ஆபத்தான உணவுகளின் வரிசையில் கோபி மஞ்சுரியனை சேர்த்ததால் இந்தியாவில் தடை. பஞ்சுமிட்டாயை அடுத்து, மாலை நேர சிற்றுண்டிகளில் அதிகம் இடம்பிடிப்பது கோபி மஞ்சூரியன் தான் என்பதால் உணவுப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
‘இந்தத் தடையானது கிட்டத்தட்ட அதே நிறத்தில் தமிழ்நாட்டில் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் விரும்பிச் சாப்பிடப்படும் காளான் ஃபிரை, காளான் மஞ்சூரியன், சிக்கன் மஞ்சூரியன் ஆகிய உணவுகளின் நுகர்விலும் எதிரொலிக்கிறது.
இனிப்பும், காரமும் சேர்ந்த தக்காளி மற்றும் சோய் சாஸ் கலந்து செய்யப்படும் ஒரு வகை சீன சமையல் முறையே மஞ்சூரியன் எனப்படுகிறது. இந்த வகையான உணவில் அலூரா ரெட் என்ற நிறமூட்டி பவுடர் போன்ற செயற்கை நிறமி அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம் சேர்க்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உண்மையில் தடை செய்யப்பட்டது கோபி மஞ்சூரியன்தான். இருந்தாலும் சிந்தடிக் டை
எனப்படும் செயற்கை நிறமூட்டிகளை அதிகளவில் கலந்த அனைத்து வகையான உணவுப்.
பொருட்களையும் மக்கள் நலன் கருதி உடனடியாக பயன்பாட்டில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்பதுதான் அம்மாநில அரசின் உத்தரவில் உள்ள நோக்கம் என கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
‘இந்தத்தடை இந்திய நாடளவில் என்றாலும் உலக சுகாதார மையம் முன்னிட்ட அறிக்கையை தொடர்ந்து அணைத்து நாடுகளிலும் இது குறித்து கவனம் ஏற்கப்படுமா என்பது கேள்வி…