இலங்கையில் சிகரெட் பாவனைக்காக நாளொன்றுக்கு 520 மில்லியன் ரூபாவை (52 கோடி) மக்கள் செலவிடுவதாகவும், புகைத்தல் காரணமாக இலங்கையில் நாளொன்றுக்கு 50 பேர் மரணம் அடைவதாகவும் மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலக இறப்புகளில், தொற்றாத நோய்களால் ஏற்படும் மரணங்கள் முன்னணியில் உள்ளன மற்றும் இலங்கையில் 83% இறப்புகள் தொற்று அல்லாத நோய்களால் ஏற்படுகின்றன.
மேலும் இலங்கையில் தொற்றாத நோய்களை ஏற்படுத்தும் நான்கு முக்கிய காரணிகளில், உலக சுகாதார அமைப்பு புகைபிடித்தல் ஒரு முன்னணி காரணி என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நாட்டில் விற்பனை செய்யப்படும் 93.6 சிகரெட்டுகள் ஒன்று அல்லது இரண்டு பொதிகளில் கொள்வனவு செய்யப்படுவதாகவும், இதனால் சிகரெட் பாவனையை குறைக்கும் செயற்பாடு தடைபடுவதாகவும், உலகில் பல நாடுகள் ஒற்றை சிகரெட் விற்பனைக்கு தடை விதித்துள்ளதாகவும் அந்த மையம் சுட்டிக்காட்டியுள்ளது.